ஶ்ரீ மந்த்ரராஜ பத ஸ்தோத்ரம்
[ஸ்ரீ. உப. வித்வான் முக்கூர் லக்ஷ்மீநரஸிம்ஹாசார்ய ஸ்வாமி]
அத்தியாயம் 1

எம்பெருமான் ஸ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹனின் மந்த்ரங்கள் பல பல. எண்ணிலடங்கா அவன் மந்த்ரங்களை எண்ணத்தில் பதிய வைத்தல் என்பது மிகவும் கஷ்டம். எனவே ஸர்வக்ஞனான ஸ்ரீ ருத்ரபகவான், தான் ஸ்ரீ ந்ருஸிம்ஹனிடம் பெற்ற அனுபவத்தையெல்லாம் வடிக்கும் வாயிலாக மந்த்ரங்களுக் கெல்லாம் ராஜாவாய் விளங்கும் “ஸ்ரீ ந்ருஸிம்ஹ அநுஷ்டுப் மந்த்ரத்தை” ஒவ்வொரு பதமாய் விவரித்தருளுகிறான். அதுவே “ஸ்ரீமந்த்ரராஜ பத ஸ்தோத்ரம்” எனப் பெயர்பெற்று இப்புவியில் பெருமையுடன் விளங்குகின்றது. இது ஸ்ரீ அஹிர்புத்ந்ய ஸம்ஹிதையில் இருக்கின்றது. அஹிர்புத்ந்யன் என்றால் ஸ்ரீ ஈச்வரனுக்குப் பெயர். மூன்று மத ஆசார்யர்களால் ப்ரமாணமாக எடுத்துக் கையாளப்பெற்ற ஸ்தோத்ரம் இது.
மந்த்ரராஜ பதஸ்தோத்ரம்
ஸ்தோத்ராணாம் உத்தமம் ஸுபம் |
மந்த்ராரூடம் ஸ்ரீ ந்ருஸிம்ஹம்
ஸ்தோத்ரேணாநேந கீதயே ||
இவ்வுலகின் கண் எத்தனையோ ஸ்தோத்ரங்கள் உள்ளன. அவைகள் எல்லாவற்றைக் காட்டிலும் மிகவும் சிறந்தது, மங்களமானது இந்த ஸ்ரீமந்த்ரராஜ பத ஸ்தோத்ரம். மந்த்ரத்தில் உறையும் ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹனை இந்த ஸ்ரீமந்த்ரராஜ பத ஸ்தோத்ரத்தினால் போற்றுகிறேன்.
32 அக்ஷரங்கள் கொண்டது இம்மந்த்ரம். 32 ப்ரஹ்ம வித்யைகளும் இதனுள் அடக்கம். 11 பதங்கள் இம் மந்த்ரத்துள் அடங்கியுள்ளன. ஏகாதச ருத்ரர்களும் (பதினோறு ருத்ரர்கள்) இவனைப் போற்றுகிறார்கள். எனவே 11 பதங்களுக்கு விவரணமாக 11 ஸ்லோகங்களும், பலச்ருதியாக ஒரு ஸ்லோகமும் ஆக 12 ஸ்லோகங்களால் ஒளிரும் ஸ்தோத்ரமிது. மூன்று காலங்களிலும் இந்த ஸ்தோத்ரத்தைச் சொன்னால் நாம் பெரும் நலன்களை விவரிக்க இயலாது. நலன்களை நல்கும் நலமிகு ஸ்தோத்ரமிது.

ஸ்ரீ அஹோபில மட பீடஸ்தானத்தை அலங்கரித்த குருவரர்களான நம் ஸ்ரீமதழகிய சிங்கர்கள் அனைவரும் இந்த ஸ்தோத்ரத்தினால் பெருமையடைந்த மஹான்களே. 45-ஆவது பட்டத்தை அலங்கரித்தருளும் ஸ்ரீமதழகிய சிங்கரும் இந்த ஸ்தோத்ராநுஸந்தானத்தினால்தான் கிடைத்தற்கரிய ஸ்ரீ ந்ருஸிம்ஹாராதனம் தமக்குக் கிடைத்திருக்கிறது என உளம் உருகி ஸாதித்தருளுவதை நாம் அனைவரும் அநவரதம் கேட்டிருக்கிறோம் அல்லவா!
இந்த ஸ்தோத்ரத்தைத் தினமும் பாராயணம் செய்வதினால்தான் அடியேனுக்கும் 108 ஸ்ரீ ந்ருஸிம்ஹ மஹாயக்ஞங்களைத் திறம்படச் செய்யச் சக்தி, ஸாமர்த்யம் எல்லாம் கிடைக்கின்றது. இந்த ஸ்தோத்ரம் கற்பகவ்ருஷம் போல் வேண்டிற்றெல்லாம் தரும் இன்ப நல்லூற்று. கொள்ளமாளா இன்பவெள்ளமிது. கொள்ளக் குறைவிலாதது.
அருள் மிகுத்ததொருவடிவாய்த் தோன்றிய ஆழ்வார்களின் திவ்ய ஸ்ரீ ஸுக்திகளில் இந்த ஸ்தோத்ரம் நடையாடும் அழகே அழகு. இந்த ஸ்தோத்ரம் ஆரம்பமாகும் முதல் சொற்றொடரான “வ்ருத்தோத்புல்ல விஸாலாக்ஷம்” என்பதை ஸ்ரீ திருப்பாணாழ்வார், அமலனாதிபிரானில், “அரங்கத்தமலன் முகத்து கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப்பெரியவாய கண்கள்” என விவரித்தருளுவதை ரஸித்துக் கொண்டே இருக்கலாம்.
எனவே ஏற்கனவே பல மஹான்கள் இதன் பெருமையை எழுதியருளியுள்ளார்கள். மறுபடியும் தற்போது இது எழுதப்படுகிறது. எழுத்தில் அடங்கா இந்த ஸ்தோத்ரத்தின் பெருமையையும், பொருளையும் சிறந்த மஹான்களிடம் நன்கு கேட்டுணர்ந்து இதைத் தினமும் அனுஸந்தித்தோமேயானால் நலன்களனைத்தையும் நலமுடன் பெறலாம். இம்மை, மறுமை இரண்டிலும் பெருமையடையலாம்.
श्री:
श्री ईश्वर उवाच —
॥ श्रीमन्त्रराज पद स्तोत्रम् ॥
॥ ஸ்ரீமந்த்ரராஜ பத ஸ்தோத்ரம் ॥
वृत्तोत्फुल्लविशालाक्षं
विपक्षक्षयदीक्षितम् ।
निनादत्रस्तविश्वाण्डं
विष्णुं उग्रं नमाम्यहम् ॥ १ ॥
ஸ்ரீ ஈச்வர உவாச —
வ்ருத்தோத்புல்ல விஸாலாக்ஷம்
விபக்ஷக்ஷய தீக்ஷிதம் |
நிநாதத்ரஸ்த விச்வாண்டம்
விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம் || 1 ||
सर्वैरवध्यतां प्राप्तं
सबलौघं दितेः सुतम् ।
नखाग्रैः शकलीचक्रे
यस्तं वीरं नमाम्यहम् ॥ २ ॥
ஸர்வைரவத்யதாம் ப்ராப்தம்
ஸபலௌகம் திதே: ஸுதம் |
நக்காக்ரை: ஸகலீசக்ரே
யஸ்தம் வீரம் நமாம்யஹம் || 2 ||
पदावष्टभ्यपातालं
मूर्धाविष्टत्रिविष्टपम् ।
भुजप्रविष्टाष्टदिशं
महाविष्णुं नमाम्यहम् ॥ ३ ॥
பதாவஷ்டப்ய பாதாலம்
மூர்தாவிஷ்ட த்ரிவிஷ்டபம் |
புஜப்ரவிஷ்டாஷ்ட திஸம்
மஹாவிஷ்ணும் நமாம்யஹம் || 3 ||
ज्योतींष्यर्केन्दुनक्षत्र
ज्वलनादीन्यनुक्रमात् ।
ज्वलन्ति तेजसा यस्य
तं ज्वलन्तं नमाम्यहम् ॥ ४ ॥
ஜ்யோதிம்ஷ் யர்க்கேந்து நக்ஷத்ர
ஜ்வலநாதீந் யநுக்ரமாத் |
ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய
தம் ஜ்வலந்தம் நமாம்யஹம் || 4 ||
सर्वेन्द्रियैरपि विना
सर्वं सर्वत्र सर्वदा ।
यो जानाति नमाम्याद्यं
तमहं सर्वतोमुखम् ॥ ५ ॥
ஸர்வேந்த்ரியை ரபிவிநா
ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா |
யோ ஜாநாதி நமாம்யாத்யம்
தமஹம் ஸர்வதோமுகம் || 5 ||
नरवत्सिंहवच्चैव
यस्य रूपं महात्मनः ।
महासटं महादंष्ट्रं
तं नृसिंहं नमाम्यहम् ॥ ६ ॥
நரவத் ஸிம்ஹவச்சைவ
யஸ்ய ரூபம் மஹாத்மந: |
மஹாஸடம் மஹாதம்ஷ்ட்ரம்
தம் ந்ருஸிம்ஹம் நமாம்யஹம் || 6 ||
यन्नामस्मरणाद्भीताः
भूतवेतालराक्षसाः ।
रोगाद्याश्च प्रणश्यन्ति
भीषणं तं नमाम्यहम् ॥ ७ ॥
யந்நாமஸ்மரணாத் பீதா:
பூத வேதாள ராக்ஷஸா: |
ரோகாத்யாஸ்ச ப்ரணச்யந்தி
பீஷணம் தம் நமாம்யஹம் || 7 ||
सर्वोपि यं समाश्रित्य
सकलं भद्रमश्नुते ।
श्रिया च भद्रया जुष्टः
यस्तं भद्रं नमाम्यहम् ॥ ८ ॥
ஸர்வோபி யம் ஸமாஸ்ரித்ய
ஸகலம் பத்ரமச்நுதே |
ச்ரியா ச பத்ரயா ஜுஷ்ட:
யஸ்தம் பத்ரம் நமாம்யஹம் || 8 ||
साक्षात्स्वकाले संप्राप्तं
मृत्युं शत्रुगणान्वितम् ।
भक्तानां नाशयेद्यस्तु
मृत्युमृत्युं नमाम्यहम् ॥ ९ ॥
ஸாக்ஷாத் ஸ்வகாலே ஸம்ப்ராப்தம்
ம்ருத்யும் ஸத்ருகணான்விதம் |
பக்தாநாம் நாஸயேத் யஸ்து
ம்ருத்யு ம்ருத்யும் நமாம்யஹம் || 9 ||
नमस्कारात्मकं यस्मै
विधायऽऽत्मनिवेदनम् ।
त्यक्तदुःखोऽखिलान्कामान्
अश्नन्तं तं नमाम्यहम् ॥ १० ॥
நமஸ்காராத்மகம் யஸ்மை
விதாய ஆத்ம நிவேதநம் |
த்யக்த துக்கோகிலாந் காமாந்
அச்நந்தம் தம் நமாம்யஹம் || 10 ||
दासभूताः स्वतस्सर्वे
ह्यात्मानः परमात्मनः ।
अतोऽहमपि ते दासः
इति मत्वा नमाम्यहम् ॥ ११ ॥
தாஸபூதா: ஸ்வத: ஸர்வே
ஹ்யாத்மாந: பரமாத்மந: |
அதோஹமபி தே தாஸ:
இதி மத்வா நமாம்யஹம் || 11 ||
शङ्करेणाऽऽदरात्प्रोक्तं
पदानां तत्वनिर्णयम् ।
त्रिसन्ध्यं यः पठेत्तस्य
श्रीर्विद्याऽऽयुश्च वर्धते ॥ १२ ॥
ஸங்கரேணாதராத் ப்ரோக்தம்
பதாநாம் தத்வநிர்ணயம் |
த்ரிஸந்த்யம் ய: படேத் தஸ்ய
ஸ்ரீர் வித்யாயுஸ்ச வர்ததே || 12 ||
உயர்ந்த இந்த மந்த்ரத்தில் ஸித்தி வேண்டுமென்றால், மூன்று விஷயங்களில் பக்தியுடன் இருத்தல் வேண்டும்
मन्त्रे तद्देवतायांश्च
तथा मन्त्रप्रदे गुरौ ।
त्रिषु भक्तिः सदा कार्या
सा हि प्रथमसाधनम् ॥
மந்த்ரே தத்தேவதாயாம்ஸ்ச
ததா மந்த்ரப்ரதே குரௌ |
த்ரிஷு பக்தி: ஸதா கார்யா
ஸா ஹி ப்ரதமஸாதனம் ||
அதாவது மந்த்ரத்தினிடத்திலேயும், மந்த்ரத்திற்குள்ளீடான தேவதையினிடத்திலேயும், அம்மந்த்ரத்தை உபகரித்த ஆசார்யனிடத்திலேயும் எப்பொழுதும் பக்தியுடன் இருத்தல் வேண்டும். மந்த்ரஸித்தி பெறுவதற்கு அது தான் நல்வழியும் உயர்ந்த வழியுமாகும். மந்த்ரத்தை நமக்கு உபதேசம் செய்த ஆசார்யனிடத்தில் பக்தியில்லாமல் கோடிக்கணக்கில் மந்த்ரஜபம் பண்ணுவதினால் பயன் ஏற்படாது. அதே போல் மந்த்ரத்தினால் உணரப்படவேண்டிய தேவதையினிடத்திலும் சிறந்த பக்தியிருக்க வேண்டும். மேலும் மந்த்ரத்தினிடத்திலேயும் நமக்குப் பரிபூர்ணமான விச்வாஸமும் பக்தியும் இருத்தல் வேண்டும். இவ்வாறு இருந்தால்தான் மந்த்ரத்தின் முழுமையான பயனை நாம் பெறமுடியும்.

எனவேதான் ஸ்ரீ ஈச்வரன் பரமபக்திச்ரத்தையுடன் ஸ்ரீ மந்த்ரராஜத்தினால் ஸ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹனைப் போற்றுகிறார்.
முன்னொரு காலத்தில் வேத வித்வான் ஒருவர் இருந்தார். அவர் பல பிள்ளைகளுக்கு வேதம் கற்பித்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் ஒரு பையன் தனக்கும் வேதம் கற்பிக்க வேண்டும் என அவர் அடி பணிந்து நின்றான். அவரும் அவனிடம் தயையுடன் ஒரு சின்ன வேதவாக்யத்தைச் சொல்லி ‘இதைச் சரியாகச் சொல்’ என்றார். ஆனால் அவன் அதைப் பல முறை முயன்றும் ஸ்வரம் மாறாமல் (ஸஸ்வரமாய்) சொல்லமுடியவில்லை. எனவே அந்த வேதவித்வானும் ‘உனக்கு வேதம் வராது. வீண் ஆசை வேண்டாம். இங்கிருந்து போய்விடு’ என்று கூறிவிட்டார். அவனும் மிக்க கவலையுடன் சென்றுவிட்டான். மறுபடியும் பத்து நாட்கள் கழித்து அச்சிறுவன் அவரிடம் வந்து இவ்வாறு கூறினான், ”ஸ்வாமிந்! அடியேன் பல கோவில்களுக்குச் சென்றேன். அங்கெல்லாம் சிறந்த வேதவிற்பன்னர்கள் நன்கு வேத பாராயணம் பண்ணிக்கொண்டிருக்கின்றார்கள். காது குளிரக் கேட்டேன். அதுபோல் அடியேனுக்கும் வேதம் கற்றுக் கொண்டு அவ்வாறு பாராயணம் பண்ண வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டுள்ளது. தங்களைக் காட்டிலும் சிறந்த அதிகாரி உண்டோ! எனவே அடியேனிடம் அன்பு கொண்டு எப்படியாவது வேதத்தைக் கற்பித்தருள வேண்டும்” என மிக்கப் பணிவன்புடன் ப்ரார்த்தித்தான்.
இதைக் கேட்ட அவர் முன்பு சொன்னதைக் காட்டிலும் மிகவும் கடினமான வேதபாகத்தைக் கண்ணை மூடிக் கொண்டு பத்து நிமிடகாலம் உச்சரித்து கண்ணைத் திறந்து பார்த்தார். அந்தப் பையன் எதிரில் காணவே இல்லை. ஓடிப் போய்விட்டான்.
பல நாட்கள் கழித்து மறுபடியும் அந்தப் பையன் வந்தான். ”ஸ்வாமிந்! தேவரீர் சொல்வதுதான் கடினமாய் இருக்கின்றது. ஆங்காங்கு நான் வேதம் கேட்கிறேன். கடினமில்லாமல் ஸரளமாய் இருக்கின்றது. எனவே அடியேனால் சொல்லக் கூடிய அளவிற்கு உபதேசித்தருள வேண்டும்” எனக் கண்ணும் கண்ணீருமாக அவருடைய திருவடியைப் பிடித்துப் பிரார்த்தித்தான்.
அவரும் அவனிடம் மனமிறங்கி, இதுதான் மந்த்ரம், ”இங்கேந்து அங்கே! அங்கேந்து இங்கே! இதைச் சரியாகச் சொல்” என்றார். இதை அவன் சரியாகக் கூறினான். இது மந்த்ரமா ஸ்வாமி? என்றான். ஆமாம், இது தான் மந்தரம் என்றார். அவனும் அவரிடம் விடை பெற்றுக் கொண்டு நேராக ஒரு பெரிய காட்டை அடைந்தான். நடுக்காட்டில் ஒரு பெரிய பாராங்கல் இருந்தது. அக்கல்லின் எதிரில் அமர்ந்து, ”இங்கேந்து அங்கே! அங்கேந்து இங்கே!” என்பதைக் கண்ணை மூடிக்கொண்டு ஜபித்துக் கொண்டே இருந்தான். அன்ன ஆஹாரம் இல்லாமல் ஜபித்தான். பத்து வருடங்கள் உருண்டோடி விட்டன. அவனைச் சுற்றிக் கரையான் புற்று அமைத்து விட்டன. பாம்புகள் பல அவன் மீது ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தன. அவன் எதையும் உணரவில்லை. அவ்வளவு நிஷ்டையுடன் ஜபித்தான். ஒரு நாள் காலை திடீரென்று பெரும் மழை பொழிந்தது. அம்மழையில் அப்புற்று கொஞ்சம் கொஞ்சமாகக் கரைய ஆரம்பித்தது. பாம்புகளெல்லாம் சீறிக் கொண்டு வெளியில் பாய்ந்து ஓடின. அப்பொழுதுதான் அவனுக்கு உணர்வு வந்தது. கண் விழித்துப் பார்த்தான். எதிரில் அப்பாராங்கல் அப்படியே இருப்பதைக் கண்டான். மறுபடியும் மந்த்ரத்தை உச்சரிக்க ஆரம்பித்தான். ”இங்கேந்து அங்கே!” என்றான். எதிரில் உள்ள பாராங்கல் எகிரி அங்கே போய் விழுந்தது. ”அங்கேந்து இங்கே”!
என்றான். அங்கிருந்து மறுபடியும் அக்கல் இங்கே வந்து விழுந்தது. அவனுக்கு வியப்பாய் இருந்தது. பல முறை சொன்னான். அக்கல் இங்கு மங்கும் பல முறை மாறி மாறி விழுந்தது. அவனுக்கு மிகுந்த ஸந்தோஷம் ஏற்பட்டது. ஆசார்யன் சொல்லிக் கொடுத்த மந்த்ரம் நன்கு பலித்துவிட்டதே! ஐயோ, ஆசார்யனுக்கு ”குருதக்ஷிணை” கொடுக்காமல் வந்து விட்டோமே என்று மிகவும் வருந்தி அவரிடம் குருதக்ஷிணை ஸமர்ப்பிப்பதற்காக வந்தான். அன்று வேதம் கற்றுக் கொண்டிருந்த வித்யார்த்திகள் அனைவரும் அப்படியே அவரிடம் வேதம் கற்றுக்கொண்டிருந்தார்கள். இவன் அவரடிபணிந்து, ”ஸ்வாமிந்! தாங்கள் உபதேசித்த மந்த்ரம் பலன் கொடுக்க ஆரம்பித்து விட்டது! தங்களுக்குக் குருதக்ஷிணை ஸமர்ப்பிப்பதற்காக இவ்விடம் வந்துள்ளேன். அடியேனை அனுக்ரஹித்தருள வேண்டும்” என்றான்.
அவர் ஆச்சர்யப்பட்டு, இத்தனை நாட்களாக நீ எங்கு போயிருந்தாய்! உன்னைக் காணோமே! உன்னைப் பல முறை தேடினேன், மந்த்ரம் பலித்துவிட்டது என்கிறாயே! என்ன மந்த்ரம் அது? எப்படிப் பலனைக் கொடுத்தது? என்று வியப்புடன் கேட்டார். (பத்து வருடங்கள் ஆனதினால் எல்லாமே அவருக்கு மறந்து விட்டது).
அம்மந்த்ரத்தைச் சொல்லட்டுமா ஸ்வாமி? என்றான். சொல்லு என்றார். உடனே அவன் ”இங்கேந்து அங்கே!” என்றான். ஆசார்யனையே தூக்கி அப்பாற் போட்டுவிட்டது. அங்கு போய் விழுந்தார். ”அங்கேந்து இங்கே!” என்றான், அங்கிருந்து இங்கு வந்து விழுந்தார். அவருக்குத் தலை சுற்றிற்று. இன்னும் ஒருமுறை கூறட்டுமா, ஸ்வாமி! என்றான். ”ஐயோ, வேண்டாம், வேண்டாம், யார் போய் விழுவது? உனக்குப்போய் வேதம் வராது என்று கூறினேனே? நானும் இத்தனை வருடங்களாக வேதத்தைச் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். பலபேருக்குச் சொல்லியும் வைத்திருக் கின்றேன். ஆனால் ஒரு மந்த்ரத்திலாவது ஸித்தியடைந் திருக்கின்றேனா? என்றால் இல்லை. ”ப்ரணவம் இல்லை! பீஜாக்ஷரம் இல்லை” வெறும் வார்த்தை ”இங்கேந்து அங்கே! அங்கேந்து இங்கே!” என்பது. அதைப் பல முறை உச்சரித்து அதற்கும் சக்தி உண்டு என்பதை நிரூபித்து விட்டாய். இதிலிருந்து ப்ரணவ, பீஜாக்ஷரங்களுடன் கூடிய மந்த்ரங்களுக்குள்ள விசேஷ சக்தியை உலகத்தவர்களுக்கு உணர்த்தினாய். உன்னைப்போல் ஸத்சிஷ்யன் உண்டோ! என்று கூறி அவனுக்கு வேதமனைத்தையும் சொல்லிவைத்தார்.
எனவே தான் அதர்வண வேதம் கூறும்போது யந்த்ர சக்தி பரிமிதமானது. ஓர் அளவிற்கு உட்பட்டது. மந்த்ர சக்தி அபரிமிதமானது. மந்த்ர சக்தியை அளவிடமுடியாது. அதை ஜபித்து அதில் ஸித்தியடைந்த மஹான்களுக்கே அதன் பெருமையை ஓரளவு அறிய முடியுமென்றால் மற்றவர்களுடைய நிலையை என்னவென்று சொல்வது?
இப்படிப்பட்ட மந்த்ரங்களுக்கெல்லாம் ராஜாவான ஸ்ரீமந்த்ரராஜமான ஸ்ரீ ந்ருஸிம்ஹ அனுஷ்டுப் மந்த்ரத்தின் பெருமையை என்னவென்று எழுத முடியும்! பக்தியோகத்தை வித்யைகளுக்கெல்லாம் ராஜவித்யை என்கிறான் பகவான். அது போல் மந்த்ரங்கள் அனைத்திற்கும் ராஜாவான இம்மந்த்ரத்தை ”மந்த்ரராஜம்” என்கின்றனர் மஹான்கள்.
நமது பெருமைக்குரிய ஸ்ரீமதஹோபிலமடாஸ்தானத்தில் 40-ஆவது பட்டத்தில் மூர்த்தாபிஷிக்தராய் எழுந்தருளியிருந்த காரைக்குறிச்சி பெரிய ஸ்ரீமதழகிய சிங்கர் இம்மந்த்ரத்தில் பரிபூர்ண ஸித்தியடைந்து சிஷ்யவர்கங்களை விசேஷமாய் அனுக்ரஹித்தாயிற்று என்பதை நாம் நன்கு அறிந்தவர்களே.
இம்மந்த்ரராஜ பத ஸ்தோத்ரத்தின் பெருமையை என்னென்பது? ஏகாதச ருத்ரர்களால் போற்றப்படுகின்றது. த்வாதசாதித்யர்கள் போல் நன்கு ப்ரகாசிக்கின்றது. அஷ்டவஸுக்கள் போல் வேண்டிற்றெல்லாம் தரவல்லது. அச்வினீ தேவதைகள் போன்ற வளம் குன்றாமல் விளங்கும் மாபெரும் ஸ்தோத்ரமிது.
பதே பதே மந்த்ரராஜே
த்ருச்யதே தத்பதம் சுபம் |
ரஹஸ்யம் தாபநீயஸ்ய
பலம் தத்ர ப்ரத்ருச்யதே ||
இந்த ஸ்ரீ மந்த்ரராஜபத ஸ்தோத்ரத்தில் ஒவ்வொரு பதத்திலும் அவனது சுபமான இணையடிகளின் பெருமை நன்கு புலப்படுகின்றது. அவன் உறையும் ”தத்விஷ்ணோ: பரமம் பதம்” என்கிற நலமந்தமில்லதோர் நாட்டின் பெருமையும் புலப்படுகின்றது. ஸ்ரீ ந்ருஸிம்ஹ தாபநீய உபநிஷத்தின் பரமரஹஸ்யமான, பலமான மாலோலனின் பெருமையும் நன்கு புலப்படுகின்றது.
இந்த ஸ்தோத்ரம் ஒரு கலைக்களஞ்சியம். இதில் இல்லாதது வேறெங்கிலும் இல்லை. இந்த ஸ்தோத்ரத்தின்கண் காணும் விஷயங்களாவன:-
(1) லக்ஷ்மீபதித்வம்
(2) உபய விபூதி நிர்வாஹகத்வம்
(3) ஆச்ரித ஸம்ரக்ஷகத்வம்
(4) ஆச்ரித விரோதி நிரஸநத்வம்
(5) ஸத்ய காமத்வம்
(6) ஸத்ய ஸங்கல்பத்வம்
(7) அபஹத பாப்மத்வம்
(8) சுபாச்ரயத்வம்
(9) ஸர்வக்ஞத்வம்
(10) ஸர்வதோமுகத்வம்
(11) விம்ருத்யுத்வம்
(12) ஸர்வாந்தர்யாமித்வம்

(1) லக்ஷ்மீபதித்வம் :- திருவுக்கும் திருவாகிய செல்வனாய், திருவின் கேள்வனாய், பூமன்னுமாது பொருந்திய மார்பனாய், மாமலர் மன்னிய மங்கை மகிழ்ந்துறை மார்பினனாய், தினையளவும் திருமகளைப் பிரியாதவனாய், அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கையுறை மார்பினனாய், திருமகள் சேர் மார்பனாய் விளங்கும் நிலை.
ததேதத் ஸூக்ஷ்மமிதுனம்
பரஸ்பர விசிந்விதம் |
ஆதாவந்யோந்யமிச்ரத்வாத்
அந்யோந்யப்ரதிபாதகம் ||
என்கிற ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம வசனப்படி ஒன்றினுடைய பெருமை மற்றொன்றினிடத்திலே என்கிறபடி ஆதியிலிருந்து சேர்ந்தே விளங்கும் இந்த இரட்டையின் பெருமை ஒன்றையிட்டு ஒன்றை யறிதல் வேண்டும்.
”இன்னமுதத்திருமகளென்று இவரை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே ” என்பது ஸ்வாமி தேசிகனின் அருள்வாக்கு.
(2) உபய விபூதி நிர்வாஹகத்வம் :- ”பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற வெம்பெருமான்” நித்ய விபூதி (ஸ்ரீவைகுண்டம்), லீலாவிபூதி என்கிற ஈரேழு புவன பாண்டங்கள் ஆகிய அனைத்தையும் ஆள்பவன்.
(3) ஆச்ரித ஸம்ரக்ஷகத்வம் :- ப்ரபந்ந ஸுலபன் அவன். அடிபணிந்தவர்களை ரக்ஷிக்கும் உயர்ந்த குணம்.
(4) ஆச்ரித விரோதி நிரஸநத்வம் :- தன்னடி பணிந்தவர்களின் பகைவர்களைப் பூண்டோடு அழித்தருளும் பெருங்குணம்.
(5) ஸத்யகாமத்வம் :- உண்மையான எண்ணமுடையவன். அவனுடைய எண்ணம் பழுதாவதில்லை.
(6) ஸத்யஸங்கல்பத்வம் :- பழுதில்லா ஸங்கல்பம் உடையவன்.
(7) அபஹதபாப்மத்வம் :- பாபமே கலப்பில்லாதவன்.
(8) சுபாச்ரயத்வம் :- நாம் ஆச்ரயிக்கத் தகுந்த மங்கள மூர்த்தி.
(9) ஸர்வக்ஞத்வம் :- ”மாசூணாச்சுடருடம்பாய் மலராது குவியாது மாசூணாக்ஞானமாய்” என்கிறபடி எல்லாவற்றையும் நன்கு உணரும் தன்மை.
(10) ஸர்வதோமுகத்வம் :- ”விஷ்ணு: ஸர்வதோமுக:” என்கிறபடி எங்கும் முகமுடையவன்.
(11) விம்ருத்யுத்வம் :- ம்ருத்யுவிற்கும் ம்ருத்யுவானவன். ம்ருத்யுபயமற்றவன்.
(12) ஸர்வாந்தர்யாமித்வம் :- ஸர்வசராசரங்களுக்கும் உள் உறைபவன். உடல் மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன். ”ஏகோ தேவ: ஸர்வபூதேஷு கூட:” என்கிறபடி எல்லாவற்றினுள்ளும் மறைந்து உறைபவன்.
இப்படி அவன் பெருமை பலபடியாக இந்த ஸ்தோத்திரத்தில் பேசப்படுகின்றது. தொடர்ந்து வரும் அத்தியாயங்களில் இம்மந்திரத்தின் உள்ளீடான தேவதை ஶ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹனின் மாபெரும் பெருமைகளை அனுபவிப்போம்.!
(தொடரும்)
ஶ்ரீ:
ஶ்ரீ மந்த்ரராஜ பத ஸ்தோத்ரம்
[ஸ்ரீ. உப. வித்வான் முக்கூர் லக்ஷ்மீநரஸிம்ஹாசார்ய ஸ்வாமி]
அத்தியாயம் 2

ஸ்ரீமந்த்ரராஜத்தில் விளங்கும் மாலோலனின் க்ருபையை எழுதி முடியாது.
ஸப்தப்ராகாரமத்யஸ்தம்
ஸப்தஸாலே விராஜிதம் |
ஸப்தே முக்திப்ரதே முக்யம்
த்ரிஸப்தே பாவயே ஹரிம் ||
பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்தில் ஸ்வாதி நக்ஷத்திர மஹா நாரஸிம்ஹ மஹாயக்ஞம் தற்போது நடந்து கொண்டிருக்கின்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீமஹா யக்ஞத்தை ஸேவித்து மகிழ்கிறார்கள். ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ பௌண்டரீபுரம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆகிய யதீச்வரர்கள் எழுந்தருளி மங்களாசாஸனம் செய்து அனுக்ரஹித்துக் கொண்டிருக்கும் இந்த சுப ஸமயத்தில் ஸ்ரீயக்ஞவாடிகையிலேயே அடியேன் இதைத் தொடர்ந்து எழுதுகிறேன். இதுதான் ஸ்ரீ மாலோலனின் அருள்.
மாலோல: புண்டரீகாக்ஷ:
சேதே ப்ரணவமந்திரே |
யக்ஞம் கரோதி ஸர்வாத்மா
யக்ஞமூர்த்தி: ஸநாதந: ||
ப்ரணவாகார விமானத்திற்குள் ஸ்ரீரங்கத்தில் கண்வளர்ந்தருள்பவன் ஸ்ரீந்ருஸிம்ஹனே. வேள்வி வடிவினனான அவனே நடத்தும் வேள்வி இது.
இவ்வேள்வியில் ஸ்ரீமந்த்ரராஜபதஸ்தோத்ரம் 32 ஆயிரம் ஆவ்ருத்தி ஜபிக்கப்படுகிறது. ஒரு தடவை ஜபித்தாலே பெரும் பயனைத்தரவல்லது. 32 ஆயிரம் ஜபிப்பதினால் ஏற்படக்கூடிய விசேஷமான மாபெரும் பயன்களை என்னவென்று எழுதுவது?

”ஸ்ரீ ஈச்வர உவாச” என்றாரம்பமாகிறது இந்த ஸ்தோத்திரம். இதன் பொருள் ”ஸ்ரீ ஈச்வரன் கூறினான்” என்பது. ஸ்ரீந்ருஸிம்ஹ தாபநீய உபநிஷத்தில் ஸ்ரீந்ருஸிம்ஹ அனுஷ்டுப் மந்த்ரமான இந்த மந்த்ர ராஜத்தை அக்ஷரமக்ஷரமாக விவரிக்கப்படுகின்றது.
(1)
ஓம் உம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவாந்
யஸ்ச ப்ரஹ்மா தஸ்மை வை நமோ நம: ||
(2)
ஓம் க்ரம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவாந்
யஸ்ச விஷ்ணு: தஸ்மை வை நமோ நம: ||
(3)
ஓம் வீம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவாந்
யஸ்ச மஹேச்வர: தஸ்மை வை நமோ நம: ||
(4)
ஓம் ரம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவாந்
யஸ்ச புருஷ: தஸ்மை வை நமோ நம: ||
(5)
ஓம் மம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவாந்
யஸ்ச ஈச்வர: தஸ்மை வை நமோ நம: |
(6)
ஓம் ஹாம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவாந்
யா ஸரஸ்வதி தஸ்மை வை நமோ நம: ||
(7)
ஓம் விம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவாந்
யா ஸ்ரீ: தஸ்மை வை நமோ நம: ||
(8)
ஓம் ஷ்ணும் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவாந்
யா கௌரீ தஸ்மை வை நமோ நம: ||
(9)
ஓம் ஜ்வம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவாந்
யா ப்ரக்ருதி: தஸ்மை வை நமோ நம: | யஸ்
(10)
ஓம் லம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவாந்
யா வித்யா தஸ்மை வை நமோ நம: |
(11)
ஓம் தம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவாந் யஸ்சோங்கார: தஸ்மை வை நமோ நம: |
(12)
ஓம் ஸம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவாந்
யா: சதஸ்ரோர்த்தமாத்ராஸ் தஸ்மை வை நமோ நம:
(13)
ஓம் வம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவாந்
யே ச வேதா: ஸாங்கா: ஸசாகா: தஸ்மை வை நமோ நம: ||
(14)
ஓம் தோம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவாந்
யே பஞ்சாக்நய: தஸ்மை வை நமோ நம: ||
(15)
ஓம் மும் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவாந்
யா: ஸப்த வ்யாஹ்ருதய: தஸ்மை வை நமோ நம: ||
(16)
ஓம் கம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவாந்
யே சாஷ்டௌ லோகபாலா: தஸ்மை வை நமோ நம: ||
(17)
ஓம் ந்ரும் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவாந் யேசாஷ்டௌ வஸவ: தஸ்மை வை நமோ நம: ||
(18)
ஓம் ஸிம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவாந்
யே ச ருத்ரா: தஸ்மை வை நமோ நம: ||
(19)
ஓம் ஹம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவாந்
யே சாதித்யா: தஸ்மை வை நமோ நம: ||
(20)
ஓம் பீம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவாந்
யே சாஷ்டௌ க்ரஹா: தஸ்மை வை நமோ நம: ||
(21)
ஓம் ஷம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவாந்
யாநி பஞ்ச மஹாபூதாநி தஸ்மை வை நமோ நம: ||
(22)
ஓம் ணம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவாந்
யஸ்ச கால: தஸ்மை வை நமோ நம: ||
(23)
ஓம் பம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவாந்
யஸ்ச மநு: தஸ்மை வை நமோ நம: ||
(24)
ஓம் த்ரம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவாந்
யஸ்ச ம்ருத்யு: தஸ்மை வை நமோ நம: ||
(25)
ஓம் ம்ரும் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவாந்
யஸ்ச யம: தஸ்மை வை நமோ நம: ||
(26)
ஓம் த்யும் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவாந்
யஸ்ச அந்தக: தஸ்மை வை நமோ நம: ||
(27)
ஓம் ம்ரும் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவாந்
யஸ்ச ப்ராண: தஸ்மை வை நமோ நம: ||
(28)
ஓம் த்யும் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவாந்
யஸ்ச ஸூர்ய: தஸ்மை வை நமோ நம: ||
(29)
ஓம் நம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவாந்
யஸ்ச ஸோம: தஸ்மை வை நமோ நம: ||
(30)
ஓம் மாம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவாந்
யஸ்ச விராட்புருஷ: தஸ்மை வை நமோ நம: ||
(31)
ஓம் ம்யம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவாந்
யஸ்ச ஜீவ: தஸ்மை வை நமோ நம: ||
(32)
ஓம் ஹம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவாந்
யஸ்ச ஸர்வம் தஸ்மை வை நமோ நம: ||
மேற்கண்ட 32 வாக்யங்களை கவனித்தால் எல்லா தேவதைகளுக்கும் அந்தர்யாமியாய் இருந்து அந்தந்த தேவதைகளை செயல்படுத்துபவன் எம்பெருமான் ஸ்ரீலக்ஷ்மீந்ருஸிம்ஹனே என்பது நன்கு புலப்படுகின்றது. ”ஏகோ தேவ: ஸர்வ பூதேஷு கூட:’‘ என்றும் ”உடல் மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்” என்றும் இப்படிப் பலவிதமான ப்ரமாண வாக்யங்கள் அவன் எங்கும் நிறைந்திருப்பதை வலியுறுத்துகின்றன. எங்கும் நிறைந்திருப்பவன் ஸ்ரீந்ருஸிம்ஹனே. ஸ்ரீந்ருஸிம்ஹ வடிவில் இன்றும் எல்லாப் பொருள்களிலும் விளங்குபவன் ஸ்ரீந்ருஸிம்ஹனே என்பதை ஸ்ரீஸ்வாமி தேசிகன் ஸ்ரீவரதராஜ பஞ்சாஸத்தில் ”அதாநாபி கரீச நூநம் த்ரைலோக்யமேததகிலம் நரஸிம்ஹம் கர்பம்” என்கிறார்.
எனவே ஸ்ரீ ஈச்வரனுக்கும் அந்தர்யாமியாய் இருப்பவன் இவனே ஆனதினால் தன்னுடைய பெருமைகளைத் தானே இந்த ஸ்தோத்திரத்தில் பேசியருளுகிறான் எம்பெருமான் என்றால் மிகையாகுமோ!
அலைகள் மோதும் க்ருஷ்ணவேணியின் கரை ஆந்திர மாநிலத்தின் பெருமையைக் கூட்டும் ஸ்ரீ மட்டபல்லி மஹா நரஸிம்ஹ க்ஷேத்ரம்.
செட்டுல்லோ சேமல்லோ ரிக்வேதமு
கொண்டல்லோ கோணல்லோ யஜுர்வேதமு |
க்ருஷ்ணவேணீதரங்கால்லோ ஸாமவேதமு
த்வநிஞ்சேடி அதர்வணமு வநமந்தயு ||
என்கிறபடி மரங்களிலும், புதர்களிலும் எழும் ஒலியில் ரிக்வேதமும், மலை மேடுகளிலும், மலைக்கோணங்களிலும் காற்றுபட்டு எழும் ஒலியில் யஜுர் வேதமும், க்ருஷ்ணாநதியின் அலைகளின் ஓசையில் ஸாம வேதமும், அவ்வனம் பூராவும் அதர்வணவேத சப்தமும் பரவி நிற்கும் அழகானதொரு சூழ்நிலை. நம் ஹ்ருதய குஹையில் எம்பெருமான் எப்படியிருப்பான் என்பதை உணர்த்தும் வகையில் ஸ்ரீமட்டபல்லி க்ஷேத்ரத்தில் எம்பெருமான் ஸ்ரீந்ருஸிம்ஹன் குஹையில் உறைந்து நிற்கும் அழகே அழகு.
மட்டபல்லிநிவாஸாய
மதுராநந்தரூபிணே |
மஹாயக்ஞஸ்வரூபாய
ஸ்ரீந்ருஸிம்ஹாய மங்களம் ||
இனிமையும், ஆனந்தமும் நிறைந்து விளங்குபவனாயும், மஹா வேள்வி ஸ்வரூபனாயும், ஸ்ரீமட்டபல்லியில் உறைபவனாயும் விளங்கும் ஸ்ரீந்ருஸிம்ஹனுக்கு பரம மங்களம் எனப்போற்றப்பெரும் ஸ்ரீமட்டபல்லி க்ஷேத்ரத்தில் அவனை ஸேவித்துக்கொண்டு அவன் திருவடிவாரத்தில் அமர்ந்து இதை எழுதிக்கொண்டிருக்கின்றேன்.
நமது பாரத தேசத்தின் உத்துங்க ஸ்தானமாம் ஸ்ரீபதரிகாச்ரமத்தில் நமது ஸ்ரீ மாலோலன், ஆசார்ய ஸார்வபௌமராம் நமது ஸ்ரீமதழகிய சிங்கருடன் விளங்கும் இந்த உயர்ந்த வேளையில், உயர்ந்த ஸ்தோத்ரமாம் ஸ்ரீமந்த்ரராஜபதஸ்தோத்ரத்தை இங்கு ஆரம்பித்து விளக்கும்படியான பாக்யம் ஏற்பட்டுள்ளது.
உயர்ந்த இந்த மந்த்ரத்தில் ஸித்தி வேண்டுமென்றால், மூன்று விஷயங்களில் பக்தியுடன் இருத்தல் வேண்டும்
ஸ்ரீ மந்த்ரராஜபதஸ்தோத்ரம்
ஸ்ரீஈச்வர உவாச—
வ்ருத்தோத்புல்ல விஸாலாக்ஷம்
விபக்ஷ க்ஷய தீக்ஷிதம் |
நிநாத த்ரஸ்த விஸ்வாண்டம்
விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம் ||
பதவுரை:-
வ்ருத்தோத்புல்ல விஸாலாக்ஷம் – நன்கு மலர்ந்த நீண்ட பெரியவாய கண்களை உடையவனும்
விபக்ஷக்ஷய தீக்ஷிதம் – விரோதிகளை ஒழிப்பதைக் குறிக்கோளாக உடையவனும்
நிநாத த்ரஸ்த விஸ்வாண்டம் – திருமிடற்றோசையினால் உலகங்கள் அனைத்தையும் நடுங்கச்செய்யபவனும்
விஷ்ணும் – எங்கும் நிறைந்தவனும்
உக்ரம் – மிகவும் பயங்கர ரூபமுடையவனுமானவனை
அஹம் – நான் (ஈச்வரனான நான்)
நமாமி – வணங்குகிறேன்.
(1) வ்ருத்தோத்புல்ல விஸாலாக்ஷம்- ஈச்வரன் முதற்கண் இந்த ஸ்தோத்ரத்தில் எம்பெருமானுடைய திருக்கண்களை விவரிக்கிறார்.
ஸ்ரீராமாவதார காலத்தில் எம்பெருமானுடைய திருநேத்ரங்களில் ஆழ்ந்தவர்கள் மூவர்.
(1) சக்ரவர்த்தியான தசரதன்,
(2) மதங்கமஹர்ஷியின் சிஷ்யையான சபரீ,
(3) வாயு புத்ரனான ஸ்ரீ ஆஞ்ஜநேயன்.

(1) ஸ்ரீவிச்வாமித்ரர் ராமனைத்தன்னுடன் அனுப்பிவைக்கும்படி தசரதனை நியமித்தபோது, ”ஊனஷோடஸவர்ஷோ மே ராமோ ராஜீவலோசன:” என்று ராமன் மிகவும் சிறியவன், தாமரைக் கண்ணன் என்று கண்களைக் குறிப்பிடுகிறார்.
(2) சபரி ராமனைப்பார்த்து
சக்ஷுஷா தவ ஸௌம்யேந
பூதாஸ்மி ரகுநந்தந |
கமிஷ்யாம்யக்ஷயாந் லோகாந்
த்வத்ப்ரஸாதாதரிந்தம ||
என்று எம்பெருமானுடைய திருக்கண்களின் அழகைக் குறிப்பிட்டு அக்கடாக்ஷத்தினால் தான் பரிசுத்தமாகிவிட்டதாகவும், திரும்பி வருதலில்லாத சாஸ்வதமான லோகங்களுக்குத்தான் போய்க்கொண்டிருப்பதாகவும் குறிப்பிடுகிறாள்.
(3) மாருதியைப்பார்த்து ஸீதாபிராட்டி ஸ்ரீ ராமபிரானின் திருமேனி வடிவழகை ”கதமுருகதம் பாஹு” என்றாரம்பித்து ராமனின் தொடை, கைகள் எப்படி இருக்கும் என்று வினவியபொழுது,
”ராம: கமலபத்ராக்ஷ:’‘ என்று ஆரம்பித்து விவரிக்கிறான். முதற்கண் ஆஞ்ஜநேயன் கண்களையே குறிப்பிடுகிறான். பனைக்குப்பனை தத்தித்திரியும் குரங்கினத்தவனான தன்னையே ஆட்கொண்டுவிட்டது அக்கண்கள் எனப் போற்றி மகிழ்கிறான்.
ஏன்! ஸீதாபிராட்டியே அசோகவனத்தில் ஸ்ரீராமனை நினைத்து இவ்வாறு நெகிழ்கிறாள்.
தம் பத்மதளபத்ராக்ஷம்
ஸிம்ஹவிக்ராந்தகாமினம் |
தன்யா: பச்யந்தி மே நாதம்
க்ருதக்ஞம் ப்ரியவாதினம் ||
ஸ்ரீராமனின் மற்றைய ப்ரபாவங்களைக் கூறும் முன்பு கண்களையே குறிப்பிடுகிறாள் ”தம் பத்மதளபத்ராக்ஷம்” என்று.
ஹிரண்யாக்ஷன் பூமிப் பிராட்டியை எடுத்துக்கொண்டு ஸமுத்ரத்தில் மறைந்தபொழுது ஸ்ரீ பூமிப் பிராட்டி அங்கிருந்து ஓலமிடுகிறாள்.
”நமஸ்தே புண்டரீகாக்ஷ சங்க சக்ர கதாதர |”
என்று எம்பெருமானின் கண்களையே முதற்கண் குறிப்பிடுகிறாள்.
தூதுவனாய் கண்ணன் ஹஸ்தினாபுரம் சென்றபொழுது யாரும் எதிர்பாராவண்ணம் ஸ்ரீ விதுரர் திருமாளிகையில் ஆதித்யத்தை ஏற்றுக்கொண்டான். அப்பொழுது துர்யோதனன் கர்வமுடன் கேலியாய் பகவானை அவமதித்துப் பேசியவண்ணம் அவனது திவ்யமான நேத்ரங்களில் ஈடுபட்டே குறிப்பிடுகிறான்.
பீஷ்ம த்ரோணாவதிக்ரம்ய
மாம் சைவ மதுஸூதன |
கிமர்த்தம் புண்டரீகாக்ஷ
புக்தம் வ்ருஷலபோஜனம் ||
தாமரைக்கண்ணனே! என விளிக்கின்றான்.
மாபெரும் ஸபையில் த்ரௌபதி ஓலமிடுகிறாள்.
சங்கசக்ரகதாபாணே
த்வாரகாநிலயாச்யுத |
கோவிந்த புண்டரீகாக்ஷ
ரக்ஷ மாம் சரணாகதாம் ||
என்று தாமரைக்கண்ணனே! எனக் கதறுகிறாள். நம்மாழ்வாரும், ”பங்கயக்கண்ணனென்கோ! பவளச் செவ்வாயனென்கோ” என ஆச்சர்யப்படுகிறார்.

சூடிக்கொடுத்த நாச்சியாரும் ”அங்கணிரண்டுங்கொண்டெங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்தேலோரெம்பாவாய்” என்று எம்பெருமானின் கடாக்ஷவீக்ஷணத்தின் பெருமையைப் பேசியருளுகிறாள்.
திருப்பாணாழ்வார் திருவரங்கன் திருமுற்றத்து நின்று, ”காட்டவே கண்ட பாதகமல நல்லாடையுந்தி, தேட்டருமுதர்பந்தம் திருமார்பு கண்ட செவ்வாய், வாட்டமில் கண்கள் மேனி” என்கிறபடி வரிசையாக அரங்கனின் அவயவ ஸௌந்தர்யத்தில் ஈடுபட்டுப்பேசுகிறார்.
இதில் வாட்டமில்லாக் கண்களின் பெருமையை
பரியனாகி வந்த
அவுணனுடல் கீண்ட
அமரர்க்கு அரியவாதிப்பிரான்
அரங்கத்தமலன் முகத்துக்
கரியவாகிப் புடைபரந்து
மிளிர்ந்து செவ்வரியோடி
நீண்டவப் பெரியவாய கண்கள்
என்னைப் பேதமை செய்தனவே.
என ஆழ்ந்து அநுபவித்துப் பேசுகின்றார்.
மற்றைய எல்லா அவதாரக்கண்களைக்காட்டிலும் ஸ்ரீந்ருஸிம்ஹாவதாரக் கண்களுக்குத்தான் தனிச்சிறப்பு. அச்சிறப்பு அம்சங்களை நினைத்து, நினைத்து உருகுகிறார்.
(1) கோபக்கனல் தெறிக்கும் திருமுகமண்டலத்தில் பரம பக்தனான ப்ரஹ்லாதக் குழந்தையைக் குளிரக் கடாக்ஷித்த ஸ்ரீந்ருஸிம்ஹனின் திவ்ய நேத்ரங்களை அனுபவித்துப் பேசுகிறார். ஸ்ரீந்ருஸிம்ஹாவதாரத்தில் ஸிம்ஹ கர்ஜனை செய்தருளும் பயங்கரமான திருமுகமண்டலத்தின் மேல் பக்கத்தில் அக்நியைப்போன்று ஜ்வலிக்கக்கூடிய பிடரி மயிர்களாலும், புருவங்களின் நெறிப்புகளாலும், கீழ்பாகத்தில் மிகவும் பயங்கரமான கோரமான அலைத்த பேழ்வாயும் சிங்கப் பற்களாலும் ஈரேழு உலகங்களையும் பிளந்தெரியக்கூடிய அட்டஹாஸமான ஸிம்ஹ கர்ஜனையினாலும் சூழப்பெற்ற திருக்கண்களில் கருணையே பரந்து நிற்க பரம பக்தனான ஸ்ரீ ப்ரஹ்லாதாழ்வானைக் குளிரக் கடாக்ஷித்து மிகுந்த வாத்ஸல்யத்துடன் தன் குட்டிக்குப் பால் கொடுப்பதுபோல தயையுடன் விளங்கும் அழகே அழகு, ”சீற்றத்தோடருள் பெற்றவன்” என்பது ஆழ்வார் அனுபவம்.
(2) நரங்கலந்த சிங்கமதான இந்தச் சேர்த்தியழகை வேறெங்கிலும் காண இயலுமா? கொழுந்தணலில் தாமரைப்பூத்தது போலக் கோபக்கனல் தெறிக்கும் திருமுகமண்டலத்தில் தயையைப்பொழியும் அந்தத் திருக்கண்களின் சோபையை என்னென்பது!
(3) அன்றலர்ந்த செந்தாமரையினை வென்று நிற்கும் திருமுகமண்டலம், திருக்கண்கள்.
கருமுகில் தாமரைக்காடு பூத்து
நீடு இருசுடர் இருபுறத் தேந்தியேந்தலர்ந்
திருவுடன் பொலிய ஓர்
செம்பொற்குன்றின்மேல் வருவபோல்
கலுழன்மேல் வந்து தோன்றினான்
என்பது கம்பநாடுடைய வள்ளலின் அனுபவம்.

அடிபணியும் பக்தர்களைக் கண்டமாத்திரத்தினால் அன்றலர்ந்த செந்தாமரையினை வென்று நிற்கிறது அத்திருக்கண்கள். இதைத்தான் ”வ்ருத்தோத்புல்ல விஸாலாக்ஷம்” எனக் குறிப்பிடுகிறார் ஸ்ரீ ஈச்வரன். பகவான் கருணைக்கடல்.
அக்கடலுக்குள்ளேயொரு குட்டிக்கடல் அவனது கண்கள். ”கடலைத்தடாகமாக்கினாற் போலே இடமுடைத்தாயிருக்கை” அதிநீசனான என் பேரிலும் விழுந்து என்னை ஆரப்பருகுகின்றது. ”லோசநாப்யாம் பிபந்நிவ” என்றல்லவோ அவன் திருக்கண்களின் நேர்த்தி.
(4) ”வ்ருத்தோத்புல்லவிஸாலாக்ஷம்” அப்பெரியவாய கண்கள் ”செவியளவும் அலையெறிகை” விசாலநேத்ர மென்றால் ஸாமான்யர்கள் அளவும் கடாக்ஷம் வந்து விழுவதால், ஸாமான்யனான என்னையும் ஆட்கொண்டுவிட்டதே என மிகவும் வியக்கின்றார்.
‘ப்ருஹத்வாத்‘ ப்ரஹ்மமாகிறான் அவன். ”ப்ருஹத்தே விஷ்ணோ” என்கிறது மறையும். ”விஸாலாக்ஷம்” என்பதினால் ப்ரஹ்மத்தைக் காட்டிலும் பெரியதாய் விளங்குகின்றது அவனது நேத்ரங்கள் என்பதை ரஸித்து உணரவேண்டும்.
”கண்களின் க்ருபை வெள்ளத்தால் உடம்பெல்லாம் கண்ணாகச் செய்யப்பார்க்கின்றன” என்பது பட்டரின் அநுபவம்.
இதை ஸ்ரீமட்டபல்லி மஹாக்ஷேத்ரத்தில் ஸ்ரீ க்ருஷ்ணாநதீ தீரத்தில் அமர்ந்து எழுதிக்கொண்டிருக்கும்போது ஒரு விசேஷ அனுபவத்தை அடியேனுக்கு அருளினான் அப்பரமன். ஸ்ரீ மட்டபல்லி ஸ்ரீலக்ஷ்மீந்ருஸிம்ஹ தேவஸ்தானத்தைச் சேர்ந்த ப்ரமுகர்கள் அடியேனிடம் வந்து ”ஸ்ரீமட்டபல்லி லக்ஷ்மீந்ருஸிம்ஹ ஸ்வாமியைக் குறித்து ஒரு ”மங்களாஷ்டகம்” எழுதித்தர வேண்டும் எனக் கேட்டார்கள். உடனே எட்டு ச்லோகங்கள் எழுதவேண்டுமே, என்ன செய்வது? என்று திகைத்தேன். ஸ்ரீக்ருஷ்ணா நதியில் ஸாயம் ஸந்த்யையை முடித்துக்கொண்டு ஸ்ரீமட்டபல்லி வாழ் மாலோலனின் எதிரிலமர்ந்து ஸ்ரீமந்த்ரராஜபதஸ்தோத்ரத்தை 32 முறை ஜபித்தேன். என்ன ஆச்சர்யம்! அவ்வெட்டு ச்லோகங்களும் என்னைக்கிட்டி வந்தன! ஸ்ரீமந்த்ரராஜபதஸ்தோத்ரம் உடனே அளித்திடும் பலன்களை நினைத்துப் பூரித்தேன்! உளம் நெகிழ்ந்தேன்.

அடியேனுக்கு அவனருளால் கிட்டிய ஸ்ரீமட்டபல்லி மங்களாஷ்டகத்தை வாசகமஹாசயர்களின் ஆனந்தத்திற்காகவும் அனுக்ரஹத்திற்காகவும் அப்படியே இங்கே வடிக்கின்றேன்.
ஸ்ரீ மட்டபல்லி மங்களாஷ்டகம்
(1)
மட்டபல்லிநிவாஸாய
மதுராநந்தரூபிணே |
மஹாயக்ஞஸ்வரூபாய
ஸ்ரீந்ருஸிம்ஹாய மங்களம் ||
(2)
க்ருஷ்ணவேணீதடஸ்தாய
ஸர்வாபீஷ்டப்ரதாயிநே |
ப்ரஹ்லாதப்ரியரூபாய
ஸ்ரீந்ருஸிம்ஹாய மங்களம் ||
(3)
கர்தஸ்திதாய தீராய
கம்பீராய மஹாத்மநே |
ஸர்வாரிஷ்டவிநாசாய
ஸ்ரீந்ருஸிம்ஹாய மங்களம் ||
(4)
ருக்யஜுஸ்ஸாமரூபாய
மந்த்ராரூடாய தீமதே |
ச்ரிதாநாம் கல்பவ்ருக்ஷாய
ஸ்ரீந்ருஸிம்ஹாய மங்களம் ||
(5)
குஹாசாயாய குஹ்யாய
குஹ்யவித்யாஸ்வரூபிணே |
குஹராந்தே விஹாராய
ஸ்ரீந்ருஸிம்ஹாய மங்களம் ||
(6)
ஸ்ரீ பல்யத்ரிமத்யஸ்தாய
மதுராய மஹாநிதே* |
ஸுகப்ரதாய தேவாய
ஸ்ரீந்ருஸிம்ஹாய மங்களம் ||
(* நிதயே மதுராய ச |)
(7)
தாபநீயரஹஸ்யாய
தாபத்ரயவிநாசிநே |
நதாநாம் பாரிஜாதாய
ஸ்ரீந்ருஸிம்ஹாய மங்களம் ||
(8)
ராஜ்யலக்ஷ்ம்யா ஸமேதாய
ராகத்வேஷ விநாசிநே |
மட்டபல்லி நிவாஸாய
ஸ்ரீந்ருஸிம்ஹாய மங்களம் ||
பலச்ருதி:
முக்கூர் ந்ருஸிம்ஹதாஸேந
ப்ரோக்தம் மங்கள மத்புதம் |
ய: படேத் ச்ரத்தயா பக்த்யா
ஸர்வபாபை: ப்ரமுச்யதே ||
(தொடரும்)