ஶ்ரீ:
ஶ்ரீமதே ஸ்ரீலக்ஷ்மீந்ருஸிம்ஹ பரப்ரஹ்மணே நம:
ஸ்ரீ மந்த்ரராஜபத ஸ்தோத்ரம்
முக்கூர் ஶ்ரீ லக்ஷ்மீ நரஸிம்ஹாச்சாரியார்
ஶ்ரிய: பதியான ஸ்ரீந்ருஸிம்ஹனுடைய மந்த்ரங்கள் பலபல. அவற்றுள் ‘ஸ்ரீ மந்த்ரராஜன்’ எனப் போற்றப்படும் ஸ்ரீந்ருஸிம்ஹாநுஷ்டுப் மந்த்ரத்திற்கு ஈடு இணையே இல்லை. ஸர்வஜ்ஞனான ஸ்ரீருத்ரபகவான் இம்மந்திரத்தைக் கொண்டு, ‘ஸ்ரீ மந்த்ரராஜபத ஸ்தோத்ரம்’ என அருளியுள்ளான். இது அனைவராலும் பரம ப்ரமாணமாக ஒப்புக் கொள்ளப்பட்டது.
இந்த ஸ்தோத்ரத்தில், அன்றலர்ந்த செந்தாமரையினை வென்று நிற்கும் திருமுக மண்டலமும், திருநேத்ரமும் படைத்தவன் எம்பெருமான் ஸ்ரீ லக்ஷமீந்ருஸிம்ஹன். அப்படிப்பட்ட அடிபணிந்தோரின் பகைவர்களை அறவே பூண்டோடு அழித்திடுபவன், தனது ஸிம்ஹ கர்ஜனையினால் அண்டங்கள் அனத்தையும் அதிரச் செய்தவன், எங்கும் பரவி நின்ற உக்ர ரூபியான எம்பெருமானை நான் வணங்குகின்றேன்.
வரத்தால் வலி மிக்கவன் அசுரனான ஹிரண்யகசிபு. அவனை நகத்தாலே தகர்த்தெரிந்த வீரனை நான் வணங்குகின்றேன். திருவடி பாதாளத்திலும், திருமுடி அந்தரிக்ஷத்திலும், எண் திக்கிலும் திருக்கரங்கள் பரவி நின்ற மஹாவிஷ்ணுவை நான் வணங்குகின்றேன்.
ஒளியுடைய சூரியன், சந்திரன், நக்ஷத்திரங்கள் ஆகிய அனைத்திற்கும் ஒளியானவன். இவனுடைய ஒளியினால் எல்லாம் ஒளி பெருகின்றன. அப்படிப்பட்ட ஒளிமயமானவன், ஜ்வலிக்கின்றவனை நான் வணங்குகின்றேன். எல்லாவற்றையும், எங்கும், எம்பொழுதும் புலன்களின் உதவியின்றியே நன்கறிபவன், முழு முதலான எங்கும் முகமுடைய ஸர்வதோமுகனை நான் வணங்குகின்றேன்.
நரங்கலந்த சிங்கமதான திருவுருவத்துடன் தோன்றிய மஹாத்மாவானவனை, மாபெரும் பிடரியுடனும், பற்களுடனும் காட்சியளிக்கும் ஸ்ரீ ந்ருஸிம்ஹனை நான் வணங்குகின்றேன். எவனுடைய பெயரை நினைத்தாலே பூதங்கள், பிசாசங்கள், ராக்ஷஸர்கள் நடுங்கி ஓடுவார்களோ, தீராத நோய்கள் அனைத்தும் தீர்ந்தொழியுமோ அப்படிப்பட்ட பீஷணனை (பயங்கரமானவனை) நான் வணங்குகின்றேன்.
எல்லோரும் எவனை அடிபணிந்து எல்லாவிதமான மங்களங்களையும் அடைகின்றனரோ, மங்களமானவளான ஸ்ரீ மஹாலக்ஷ்மியுடன் சேர்ந்துறையும் மங்களமானவனை நான் வணங்குகின்றேன். காலத்தில் வந்து பக்தர்களின் சத்ருக்களுக்கு மருத்யுவானவனான, ம்ருத்யுவிற்கும் ம்ருத்யுவான (ம்ருத்யும்ருத்யும்) வனை நான் வணங்குகின்றேன்.
அவன் திருவடிகளில் நம: என்று கூறி ஆத்ம நிவேதனம் சரணாகதி செய்துவிட்டால் அவர் யாரயினும் காத்திடுவான். துயர் கெடும். இன்னல்கள் இடிபட்டோடும். இத்தகைய நலன்களை அருளும் எம்பெருமானை நான் வணங்குகின்றேன். எல்லோரும் அவனது தாஸர்களே. இயற்கையிலேயே தாஸர்கள். நானும் அவனுக்கு தாஸந்தான் என்பதை நன்குணர்ந்த நான் அவனை வணங்குகிறேன்.
இப்படி 11 ச்லோகங்களால் எம்பெருமானை ஸ்ரீ ஈச்வரன் நன்கு ஸ்தோத்ரம் செய்து பன்னிரெண்டாவது ச்லோகத்தில் பலன் கூறுகிறார். இந்த மந்த்ரங்களுக்கெல்லாம் ராஜாவான ஸ்ரீ மந்த்ரராஜத்தின் பதங்களின் தத்வநிர்ணயம் சங்கரனான என்னால் மிகவும் உகந்து வெளியிடப்பட்டது. இந்த ஸ்ரீ மந்த்ரராஜபத ஸ்தோத்ரத்தை தினமும் காலையில், மதியத்தில், மாலையில் யார் உகந்து உரைக்கவல்லார்களோ, அவர்களுக்கு நீங்காத செல்வமும், வளமிக்க கல்வியும், நீண்ட ஆயுளும் நலமுடன் விளங்கும் என்று பலச்ருதியும் கூறி முடிக்கிறார் ஸ்ரீ ஈச்வரன்.
இந்த ஸ்தோத்ரத்திற்குப் பலனை எழுதி முடியாது. இதனால் என்ன கிடைக்கும் என்பதைவிட எதுதான் கிடைக்காது என உணர்வதே சாலச் சிறந்தது. இத்தகைய பெருமை மிக்க ஸ்தோத்ரத்தை எல்லோரும் தினமும் படித்துப் பயன்பெற வேண்டி, ஸங்கல்பிக்கப்பட்ட 108 ஸ்ரீ ஸ்வாதி நக்ஷத்ர மஹாயஜ்ஞ வரிசையில் 1-ஆவது ஸ்ரீ யஜ்ஞம் அடியேனது குடிசையில் வைகாசி 31, 32 தேதிகளில் (13.6.81 & 14.6.81) சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் விமரிசையாக நடந்து கொண்டிருந்தபோது ஸ்ரீபாகவதோத்தமர்களின் திவ்ய திருக்கரகமலங்களில் அமூல்யமாய் ஸவிநயம் ஸமர்ப்பிக்கப்பட்டது.
– முக்கூர் லக்ஷ்மீந்ருஸிம்ஹ தாஸன்
ஸ்ரீ மந்த்ரராஜபத ஸ்தோத்ரம் (ஸ்லோகங்கள்)
ஈச்வர உவாச:
- வ்ருத்தோத்புல்ல விசாலாக்ஷம்
விபக்ஷ க்ஷய தீக்ஷிதம் |
நிநாத த்ரஸ்த விச்வாண்டம்
விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம் || - ஸர்வை ரவத்யதாம் ப்ராப்தம்
ஸபலௌகம் திதே ஸுதம் |
நகாக்ரை: சகலீ சக்ரே
யஸ்தம் வீரம் நமாம்யஹம் || - பதா வஷ்டப்த பாதாளம்
மூர்த்தா விஷ்ட த்ரிவிஷ்டபம் |
புஜப்ரவிஷ்டாஷ்ட திசம்
மஹாவிஷ்ணும் நமாம்யஹம் || - ஜ்யோதீம்ஷ்யர்க்கேந்து நக்ஷத்ர
ஜ்வலநாதீந் யநுக்ரமாத் |
ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய
தம் ஜ்வலந்தம் நமாம்யஹம் || - ஸர்வேந்த்ரியை ரபி விநா
ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா |
யோ ஜாநாதி நமாம்யாத்யம்
தமஹம் ஸர்வதோமுகம் || - நரவத் ஸிம்ஹவச்சைவ
யஸ்ய ரூபம் மஹாத்மந: |
மஹா ஸடம் மஹா தம்ஷ்ட்ரம்
தம் ந்ருஸிம்ஹம் நமாம்யஹம் || - யந்நாம ஸ்மரணாத் பீதா:
பூத வேதாள ராக்ஷஸா: |
ரோகாத்யாஸ்ச ப்ரணச்யந்தி
பீஷணந்தம் நமாம்யஹம் || - ஸர்வோபி யம் ஸமாச்ரித்ய
ஸகலம் பத்ர மச்நுதே |
ச்ரியா ச பத்ரயா ஜுஷ்ட:
யஸ் தம் பத்ரம் நமாம்யஹம் || - ஸாக்ஷாத் ஸ்வகாலே ஸம்ப்ராப்தம்
ம்ருத்யும் சத்ரு கணாந்விதம் |
பக்தாநாம் நாசயேத் யஸ்து
ம்ருத்யு ம்ருத்யும் நமாம்யஹம் || - நமஸ்காராத்மகம் யஸ்மை
விதாய ஆத்ம நிவேதநம் |
த்யக்த து: கோகிலாந் காமாந்
அச்நந்தம் தம் நமாம்யஹம் || - தாஸபூதா: ஸ்வத: ஸர்வே
ஹ்யாத்மாந: பரமாத்மந: |
அதோஹமபி தே தாஸ:
இதி மத்வா நமாம்யஹம் ||
சங்கரேண ஆதராத் ப்ரோக்தம்
பதாநாம் தத்வ நிர்ணயம் |
த்ரிஸந்த்யம் ய:படேத் தஸ்ய
ஸ்ரீர்வித்யாயுஸ்ச வர்த்ததே ||