மங்களகிரி மஹாயஜ்ஞம்
நம்ஸ்வாமியால் நடத்தப்பட்ட மங்களகிரி மஹாயஜ்ஞம் , “108 ஸ்ரீ ஸ்வாதி நக்ஷத்ர ஸ்ரீ மஹா நரஸிம்ஹ மஹா மந்த்ர ஜப ஹோம மஹா யஜ்ஞம்” தொடரில் 97-வது மஹாயஜ்ஞமாகவும், முதலாவது க்ஷேத்திர மஹாயஜ்ஞமாகவும் அமைந்துள்ளது. ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்த வைபவம் 1988 ஆம் ஆண்டு அக்டோபர் 11 முதல் 16 வரை விசேஷமாக மங்களகிரி ஶ்ரீ லக்ஷ்மிந்ருஸிம்ஹனுடைய கோவிலில் நடந்தது.
ஸ்ரீ விபவ வருஷம், புரட்டாசி ஸ்வாதி நக்ஷத்ரத்தன்று (புதன்கிழமை, 12 அக்டோபர் 1988) இந்த யஜ்ஞம் தொடங்கியது. 1,008 மண் கலசங்கள், 108 பித்தளை கலசங்கள் மற்றும் 10 வெள்ளி கலசங்களின் பிரதிஷ்டை இந்த யஜ்ஞத்தின் முக்கிய அம்சமாக அமைந்தது.
இந்த பகுதியில் மங்களகிரி மஹாயஜ்ஞத்தின் அனைத்து விசேஷங்களையும் சேவிக்கலாம். மஹாயஜ்ஞ விவரணங்களை இங்கே பார்க்கவும்.