ஶ்ரீ ந்ருஸிம்ஹாவதார வைபவம்
ஶ்ரீ ந்ருஸிம்ஹாவதார வைபவம் உபன்யாஸத்தில் நம்ஸ்வாமி ஶ்ரீ ந்ருஸிம்ஹனின் பெருமைகளை பறைச்சாற்றுகின்றார். காலத்திலும், இடத்திலும் முன்னின்று காப்பவன் ஶ்ரீ ந்ருஸிம்ஹன் என்பதை அருதியிட்டு உறுதியாக பல உதாரணங்களுடன் விளக்குகிறார்.
வேதம் பரம ப்ரமாணம்
இந்த திவ்ய உபந்யாசத்தில், நம்ஸ்வாமி ஸ்ரீ உ.வே. முக்கூர் லக்ஷ்மி நரஸிம்ஹாசார்யார் வேதங்களே அனைத்திற்கும் மேலான, முடிவான ‘பரம ப்ரமாணம்’ என்பதை அருளிச்செய்கிறார். வேதங்களின் அனாதி தன்மையையும் (அபௌருஷேயம்), அவை எவ்வாறு அனைத்து தர்மங்களுக்கும் ஆணிவேராக அமைந்து ஸத்விஷயங்களை நமக்கு உணர்த்துகின்றன என்பதையும் மிகத்…
ஶ்ரீ காயத்ரி மஹாமந்த்ர மஹிமை
இந்த திவ்ய உபந்யாசத்தில், நம்ஸ்வாமி ஸ்ரீ உ.வே. முக்கூர் லக்ஷ்மிநரஸிம்ஹாசார்யார், வேதங்களின் சாரமான காயத்ரி மந்திரத்தின் மகிமையை அருளிச்செய்கிறார். காயத்ரி ஜபத்தின் மூலம் கிடைக்கும் அளப்பரிய மந்திர சக்தி, அம்மந்திரத்தை அனுசந்திக்கும் மஹான்களின் ஆசீர்வாத பலம் மற்றும் பரிபூரண ஆரோக்கியம் ஆகியவற்றை மெய்சிலிர்க்கும் சரித்திர…
ஶ்ரீ பாதுகா ஸஹஸ்ரம் – வக்த்ரு வைலக்ஷண்யம்
இந்த திவ்ய உபந்யாசத்தில், ஸ்ரீ பாதுகா சஹஸ்ரத்தின் மகிமையையும், அதனை அருளிச்செய்த ஸ்வாமி வேதாந்த தேசிகனின் ஒப்பற்ற தகுதிகளையும் (வக்த்ரு வைலக்ஷண்யம்) முக்கூர் ஸ்வாமி மிக அழகாக விளக்குகிறார்.
ஶ்ரீ சீதா கல்யாணம்
ஶ்ரீ சீதா கல்யாணம்
நம்ஸ்வாமி விசேஷமாக ஶ்ரீ சீதா கல்யாண ப்ரகரணத்தில் பொதிந்துள்ள வேத, வேதாந்த, விசேஷ சாஸ்த்ரார்தங்களை விவித உதாரணங்களுடன் இந்த உபந்யாஸத்தில் விவரிக்கிறார்.
ஶ்ரீ ஶ்ரீநிவாஸ கல்யாணம்
ஶ்ரீ ஶ்ரீநிவாஸ கல்யாண மஹோத்ஸவம் அன்று எவ்வாறு நடந்ததோ, அப்படியே நம் கண்முன் நிறுத்துகிறார் நம்ஸ்வாமி இவ்வுபந்யாஸத்தில். 2001 வருடம் ஜனவரி 1ம் தேதி நடந்த இவ்வுபந்யாஸத்தில் அந்த ஆங்கில வருடமே மும்மத சாரமாய விளங்குகிறது என்று ஸமன்வயம் படுத்தும் பாணி மிகவும் அழகு.